தேன் கூட இதையெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் பிரச்சனை வரும்!

Published by: பிரியதர்ஷினி

தேனில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன

தேனுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்

தேன் மற்றும் நெய் இரண்டையும் சேர்ப்பது மிகவும் ஆபத்தாகும்

மீனுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இது வயிற்றுவலி, நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்

வெள்ளரியின் குளிர்ச்சி மற்றும் டையூரிடிக் பண்புகள் இனிப்பான தேனுடன் இணைவது சருமம் மற்றும் செரிமான பிரச்சனைகளை தூண்டலாம்

தேனை சுடு நீரில் கலப்பது தேனில் உள்ள நன்மை செய்யும் என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அழித்துவிடும்

தேன் மற்றும் பூண்டு சாப்பிடுவதால் செரிமான ஆரோக்கியத்தில் சிக்கல் அல்லது இரைப்பை குடல் பிரச்சினைகளை உண்டாகலாம்