இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம் ஆகும். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு தினசரி நடைபயிற்சி அவசியம் ஆகும்.
ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிக மிக அவசியம் நல்ல தூக்கம். நிம்மதியான தூக்கமே மன அழுத்தம் இல்லாத வாழ்வை தரும். அதுவே இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியம் மன நிம்மதி. மன அழுத்தமில்லாத வாழ்வு இதயத்தின் செயல்பாட்டை மேலும் ஆரோக்கியம் ஆக்கும்.
இதய ஆரோக்கியத்தில் எடை முக்கிய பங்கு வகிக்கிறது. எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும்.
ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் உள்ள டார்க் சாக்லேட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். டார்க் சாக்லேட்டை அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
புகைப்பிடிப்பது பல தீமைகளை உண்டாக்கும். இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுப்பதில் புகைப்பிடிப்பது மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.
பழங்கள், காய்கறிகள், தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவுகள் இதயத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
உப்பை அதிகளவு எடுத்துக்கொண்டால் உயர் ரத்த அழுத்தம் உண்டாகும். இதனால், உப்பை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிகளவு உப்பு, கொழுப்பு கொண்ட ஆரோக்கியமற்ற ஜங்க் ஃபுட் இதய செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும்.
உடலுக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்குவதில் மது முக்கியமானது ஆகும். இதயத்தின் ஆரோக்கியத்தை சீர்குலைப்பதில் மது முக்கிய பங்கு வகிக்கிறது.