சாதாரண காலை அல்லது கோடை மதியம் அல்லது மழை மாலை..
தேநீர் இல்லாமல் முடியுமா? தேநீர் பிரியர்களே, கவனம்!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இந்தியர்கள், குறிப்பாக நம்முடைய தேநீரின் மீதான அளவற்ற அன்பைப் பற்றி புதிதாகச் சொல்ல ஏதுமில்லை.

அதிக தேநீர் அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை.

அதிக தேநீர் குடிப்பதால் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

அதிகமாக தேநீர் அருந்தினால் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படத் தொடங்குகிறது, ஏனெனில் தேயிலையில் உள்ள டானின் செரிமான மண்டலத்தில் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை பாதிக்கிறது.

தேயிலையில் உள்ள காஃபின் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கக்கூடும், எனவே தேநீர் அருந்தினால் நெஞ்செரிச்சல் மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

அதிகமாக தேநீர் அருந்தினால் பற்கள் மஞ்சள் நிறமாக மாற வாய்ப்புள்ளது.

அதிக தேநீர் அருந்துவதால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை அதிகரிக்கலாம்



தேயிலையில் உள்ள கஃபின் இதயத் துடிப்பை அதிகரிக்கலாம்

அதனால்தான், காரணமின்றி அடிக்கடி தேநீர் அருந்துவதை குறைப்பது அவசியம்.