வைட்டமின் குறைபாடு இருந்தால் உடலில் ஏற்படும் அறிகுறிகுள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக பயோட்டின் குறைபாடு உள்ளது. கர்ப்பிணிகள், செரிமான கோளாறுகளால் இந்த குறைபாடு உண்டாகும்.
வைட்டமின் பி 12 குறைபாடு இருந்தால் உடல் மற்றும் கை, கால்களில் எரிச்சல் இருக்கும். சில சமயங்களில் தோல்களும் வறண்டு காணப்படும்.
வைட்டமின், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தலையில் செதில் திட்டுகள் மற்றும் பொடுகுகள் உண்டாகிறது. தோல் அலர்ஜியும் உண்டாகிறது.
பலருக்கும் பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வழியும். வைட்டமின் சி குறைபாடு காரணமாக இது உண்டாகிறது.
சில சமயங்களில் வாய் புண் உண்டாவதற்கு வைட்டமின் பி, இரும்புச்சத்து குறைபாடு காரணம் ஆகும்.
வைட்டமின் ஏ குறைபாடு காரணமாக பார்வை மங்கலாக தெரிகிறது. மாலைக்கண் நோய், கண்களில் வெள்ளைப் புள்ளிகள் பாதிப்பு உண்டாகிறது.
வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு காரணமாகவும் மூட்டு வலி ஏற்படுகிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் சி காரணமாக தோலில் சிவப்போ, வெள்ளை நிறத்திலோ கட்டிகள் உண்டாகும்.