இன்றைய வேகமான உலகில் தாமதமாக உறங்குவது ஒரு வழக்கமாகிவிட்டது. ஆனால் இது ஆபத்தானது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
நள்ளிரவு வரை விழித்திருப்பதால் உடலின் சுழற்சி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த நாள் சோர்வு அதிகமாக இருக்கும்
சிறு சிறு மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தூக்கத்தை பாதிக்காமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.
அனைத்து நாட்களும் ஒரே நேரத்தில் தூங்கி, எழுந்திருப்பதை வழக்கமாக்குங்கள். இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது.
மாலை வேளையில் தேநீர், காபி அல்லது சக்தி தரும் பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும். காஃபின் தூக்கத்தை தாமதப்படுத்தும்.
இரவு தூங்குவதற்கு முன் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன் இலேசான மற்றும் சமச்சீர் உணவை உண்ணுங்கள். கனமான உணவு செரிமானத்தை கடினமாக்கும். தூங்குவதை தடுக்கும்.
தூங்குவதற்கு முன் ஒரு மணி நேரம் மொபைல், லேப்டாப், டிவி பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதனால் தூக்கம் அளவு அதிகரிக்கும்.
சில நிமிட யோகா அல்லது தூங்குவதற்கு முன் செய்யும் பயிற்சிகள் மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு அளிக்கும்.
மனதை அமைதிப்படுத்தும் இசையை கேட்கலாம். இது இரவு முழுவதும் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கின்றது