எல்லா வயதினரும் ஒரே அளவு பாதாம் சாப்பிடலாமா?

ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்து பாதாம் பருப்பு உட்கொள்ளும் அளவு மாறுபடும்.

சர்க்கரை நோய், இருதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல தீவிர நோய்களைத் தடுக்க பாதாம் பருப்பின் ஊட்டச்சத்து உதவுகிறது.

மூளையின் செயல்பாட்டை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது

இந்த கொட்டையில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. இதில் பல அத்தியாவசிய தாதுக்களும் உள்ளன.

இதில் அதிகளவு புரதம் உள்ளது

பாதாம் பருப்பில் கால்சியம், மெக்னீசியம், தாமிரம் உள்ளது.

சமீபத்திய ஆய்வில், தினமும் பாதாம் சாப்பிடும் பழக்கம் இருந்தால், அது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமும் இரவு ஒரு பாத்திரத்தில் பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பாதாம் பருப்பின் தோலை உரித்து வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

ஒரு வயது வந்தவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குறைந்தது 2 பாதாம் பருப்பு சாப்பிடலாம். பின்னர் தேவைக்கேற்ப படிப்படியாக அதிகரிக்கலாம்.

ஒவ்வொருவரின் உடலைப் பொறுத்து, அவர் எவ்வளவு பாதாம் சாப்பிடலாம் என்பது அமையும். இதைத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆனால், யாருடைய செரிமான சக்தி பலவீனமாக உள்ளதோ, அவர்கள் குறைந்த அளவு பாதாம் சாப்பிடுவது நல்லது.