மழை காலங்களில் சளி தொற்றிக்கொண்டு துன்பப்படுத்துவதை தவிக்கவும் விரைவில் குணமடையவும் சில டிப்ஸ்

கிருமி மற்றும் தூசி மூக்கின் வழியே உடலுக்குள் செல்வதால் அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்

தண்ணீர், தேன், சூப் வகைகள், போன்றவற்றை குடிப்பதன் மூலம் தொண்டை எரிச்சல் மற்றும் வீக்கம் தனியும்

ஃபிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீருக்கு பதிலாக மண்பானை நீரை பயன்படுத்தலாம்

குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து உள்ளதால் சளிக்கு சிறந்த மருந்தாக இருக்கும்

முற்றிய வெண்டக்காய் மற்றும் தக்காளியில் சூப் செய்து குடித்தால் இருமல், ஜலதோசம் நீங்கும்

சுரைக்காய், வெண் பூசணி, மஞ்சள் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் சில வாரங்களுக்கு தவிர்த்தல் நல்லது

பால், தயிர், சர்க்கரை போன்றவை சளியை அதிகரிக்கும் என்பதால் மூன்றையும் அறவே தவிர்த்தல் நல்லது

உங்களையும் உங்களை சுற்றி உள்ள இடங்களையும் தூய்மையாக வைத்திருந்தால் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்

உடல்நிலை சரியில்லாத போது நன்றாக ஓய்வெடுத்தல் மூலம் நோய் விரைவில் குணமடைவது மட்டுமின்றி நோய் பரவுவதையும் குறைக்கலாம்