ஆரோக்கியம் நிறைந்த வெள்ளரிக்காய் தயிர் பச்சடி ரெசிபி!
புடலங்காய், பீர்க்கங்காய் வரிசைகளில், வெள்ளரிக்காய், நீர்ச்சத்து மிக்க நீர்க்காய்கறிகளில் முதன்மையானது. வெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி என்றும் சொல்லலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும், சருமப் பொலிவுக்கும் கூட வெள்ளரிக்காய் பெரிதும் உதவும்.
கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன;
வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம்.
கால் கப் தேங்காய், கால் டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன் கடுகு, ஒரு பச்சைமிளகாயப் போட்டு மைய அரைத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் நீரை ஊற்றி, பேஸ்ட் போல குழைந்ததும் எடுத்துக்கொள்ளவும். ஒரு கப் நறுக்கிய வெள்ளரிக்காயை, வாணலி கால் பகுதி நீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
5-6 நிமிடங்களுக்கு வெள்ளரிக்காய் மிருதுவாக வெந்து வந்ததும், அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்
நன்றாக கிளறி பரிமாறவும். தயிர் சேர்த்தும், தயிர் சேர்க்காமலும் இதைப் பரிமாறலாம்.
தினமும் உணவில் வெள்ளரிக்காய் சேர்ப்பது நல்லது.