ஒரு மனிதனுக்கு உதடு என்பது மிக மிக அவசியமானது ஆகும். அது புறத்தோற்றத்திற்கு மிகவும் முக்கியமாக திகழ்கிறது.
உதடுகளை வறட்சி அடையாமல் பாதுகாப்பதில் ஆலிவ் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது.
ஏராளமான நன்மைகளை உள்ளடக்கிய வெள்ளரிக்காய் குளிர்ச்சியை உண்டாக்கி உதட்டில் உள்ள வறட்சியை போக்கும்.
வறட்சியைப் போக்கி ஈரப்பதத்தை தக்க வைக்கும் தேங்காய் எண்ணெய் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாக உள்ளது. இதை உதட்டில் பூசலாம்.
உதடுகளை மென்மையாக பராமரிக்க பால்கிரீமை பயன்படுத்தலாம்.
சரும, கூந்தல் பராமரிப்பிற்கு உகந்த கற்றாழை உதட்டின் ஈரப்பதத்தை தக்கவைப்பதற்கு முக்கிய பங்காற்றுகிறது.
ரோஜா மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும்.ரோஜா நீர் உதட்டில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் ஆற்றல் கொண்டது ஆகும்.
உதடுகளை மென்மையாகவும், மிருதுவாகவும் பயன்படுத்த நெய் மிகவும் முக்கிய பங்காற்றுகிறது.
கிருமி எதிர்ப்பு, அழற்சி பண்புகளை கொண்ட தேன் உதட்டிற்கும் மிகவும் நன்மை பயக்கும்.