வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை கீழே விரிவாக காணலாம்.
வெள்ளரிக்காயில் வைட்டமின் கே உள்ளது. இது எலும்பை வலுப்படுத்த மிகவும் பக்கபலமாகும்.
வயிற்றுக்கு மிக மிக நல்லது வெள்ளரிக்காய். இதில் உள்ள நீர்ச்சத்து குடல் இயக்கத்திற்கு பக்கபலமாக உள்ளது. இதனால், செரிமானம் சீராக நடக்கிறது.
வெள்ளரிக்காயில் உள்ள அதிகளவு ஆன்டி ஆக்சிடன்கள் மற்றும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மேலும், இதய பாதுகாப்பிற்கும் பலம் சேர்க்கிறது.
வெள்ளரிக்காயில் உள்ள அதிக நீர்ச்சத்தும், ஆக்சிஜனேற்ற பொருட்களும் சருமத்திற்கு மிகவும் பலன் அளிக்கிறது.
வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடல் புத்துணர்ச்சி அடையும்.
வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இதில் உள்ள நீர்ச்சத்து உடலுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கும்.
இதில் உள்ள குறைந்த கிளைசெமிக் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
வெள்ளரிக்காயில் கலோரிகள் மிக குறைவாக உள்ளது. இது பசியை குறைத்து எடை இழப்புக்கு பக்கபலமாக உள்ளது.