எள்ளில் நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. மலச்சிக்கல் போன்ற பிரச்னையை சரி செய்கிறது
எள்ளில் ஆரோக்கியமான கொழுப்புகள், லிக்னன்ஸ், பைட்டோஸ்டெரால்ஸ் போன்றவை உள்ளது. இவை கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளை குறைத்து இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
எள்ளில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இவை இதய செயல்பாட்டை மேம்படுத்துகின்றன.
குறைவான கார்போஹைட்ரேட்டுகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதம் அதிகமுள்ள எள் இரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்துகிறது.
வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் சருமம் மற்றும் முடிக்கு ஊட்டமளிக்கும். அவை ஆரோக்கியமானதாவும் பளபளப்பானதாகவும் மாற்றும்.
எள்ளில் உள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளை குறைக்க உதவும். இது ஹார்மோன் சமநிலையை பராமரிக்கிறது.
எள்ளில் செலினியம் மற்றும் பிற தாதுக்கள் அதிகம் இருப்பதால், தைராய்டு ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கவும், தைராய்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
எள்ளில் உள்ள அழற்சி எதிர்ப்பு கலவைகள் கீல்வாதத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
எள்ளில் இரும்பு, தாமிரம், வைட்டமின் பி6 போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவுகின்றன.