வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதற்கான பதிலை கீழே காணலாம்.
உடலுக்கு நன்மை விளைவிக்கும் பழங்களில் ஒன்றாக வாழைப்பழமும் உள்ளது.
புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் போன்ற பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளது.
பல உடல்நலப் பிரச்சினையில் இருந்து உடலைப் பாதுகாக்கும் ஆற்றல் ஊக்கியாக வாழைப்பழம் உள்ளது.
உடல் எடையை அதிகரிக்கவும், உடலின் சக்தியை அதிகரிக்கவும் பலரும் வாழைப்பழத்தை சாப்பிடுகிறார்கள்.
வாழைப்பழத்தில் நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்திற்கும், மலச்சிக்கலுக்கும் தீர்வாகும்.
உடற்பயிற்சிக்கு பிறகு வாழைப்பழங்களை சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
உடற்பயிற்சிக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது ஆற்றல் தருகிறது. தசை வலிமைக்கு உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வாழைப்பழத்தை காலை உணவாகவோ, சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம்.