பப்பாளியை ஏன் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

வைட்டமின் சி, கரோட்டினாய்டுகள் போன்ற சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றிகள் பப்பாளி பழத்தில் உள்ளது. இது ஆக்சிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.

Image Source: Canva

வைட்டமின் சி, வைட்டமின் ஏ இருப்பதால் பப்பாளி பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Image Source: Canva

மூட்டை வலுப்படுத்தும் பாப்பைன், கைமோபாப்பைன் போன்ற நொதிகள் பப்பாளி பழத்தில் உள்ளது.

Image Source: Canva

செரிமானத்திற்கு பக்கபலமான பாப்பைன் என்ற நொதி பப்பாளி பழத்தில் உள்ளது. இது வயிற்று ஜீரணத்திற்கு பலன் தருகிறது.

Image Source: Canva

இதில் குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல பலன் தரும்.

Image Source: Canva

வைட்டமின் சி, பொட்டாசியம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி அழற்சியை குறைக்கிறது.

Image Source: Canva

வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் பப்பாளி பழத்தில் உள்ளது. இது கண்கள் பாதுகாப்பிற்கு மிக மிக முக்கியம் ஆகும்.

Image Source: Canva

செரிமானத்தை சீராக்குவதால் கல்லீரல் சிறப்பாக செயல்பட பப்பாளி உதவுகிறது.

Image Source: Canva

இதில் குறைவான கிளைசெமிக் குறியீடு மட்டுமே இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.

Image Source: Canva

பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட சிலர் பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது என்பார்கள். அதனால், உடல்நலக்குறைவு இருப்பவர்கள் மருத்துவர்கள் அறிவுரையுடன் பப்பாளி சாப்பிட வேண்டும்.

Image Source: Canva