எலுமிச்சை இந்திய சமையலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய சமையலறையில் எலுமிச்சை மிகவும் முக்கியமான பழம் ஆகும்.
எலுமிச்சை சாறு உடலுக்கு புத்துணர்ச்சி தரும் ஆற்றல் கொண்டது. உடலை நீரேற்றம் அடையவும் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் சி, தாதுக்கள் நிறைந்த பானம் இந்த எலுமிச்சை சாறு. இதனால், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது.
ஆன்டி ஆக்சிடன்கள், வைட்டமின் சி அதிகளவு இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு எலுமிச்சையிடம் உள்ளது.
எலுமிச்சையில் உள்ள ஆக்சிஜனேற்றிகள், ஃப்ரீரேடிக்கல்களுடன் போராடி சருமத்தை பளபளக்காகுகிறது.
கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் நச்சுத்தன்மையை நீக்குகிறது.
காலையில் வெதுவெதுப்பான எலுமிச்சை சாறை குடிநீரில் கலந்து குடித்தால் செரிமானம் மேம்படும். இதன் அமிலத்தன்மை செரிமானத்திற்கு உதவுகிறது.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு எலுமிச்சை உதவியாக உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்படும்.