ஆசனவாய் பிளவால் அசெளகரியமாக இருக்கா? இதை பின்பற்றுங்க சரியாகிடும்! ஆசனவாயில் உள்ள திசுக்களில் சிறிய சேதம் ஏற்பட்டால் அசெளகரியமாக இருக்கும் இந்த பிரச்சினை கஷ்டப்பட்டு மலம் கழிப்பதால் உண்டாகலாம் ஆசனவாய் வழியாக உடலுறவு கொள்வதாலோ, பிரசவத்தினாலோ, வயிற்றுப்போக்கினாலோ இது ஏற்படலாம் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தம் செய்து அந்த இடத்தில் தேங்காயெண்ணெய் தடவலாம் தேவைக்கேற்ப அவை உலர உலர மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துங்கள் விளக்கெண்ணெய் தடவினால் மாற்றம் தெரியலாம் கற்றாழை மடலில் இருந்து ஜெல்லை பிரித்தெடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவலாம் ஆளிவிதை பொடியை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம் பேரிக்காய், திராட்சை, ப்ளம் மற்றும் ஆப்பிள் போன்ற அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடலாம் மிகவும் சிரமமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது