சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published by: ABP NADU

சைக்கிள் ஓட்டுவது ஒரு விளையாட்டு அல்லது ஒரு போக்குவரத்து முறை மட்டும் இல்லை. சைக்கிள் ஓட்டும்போது செய்யும் Pedaling ஒரு அற்புதமான உடற்பயிற்சி ஆகும்.

கால் பகுதியின் தசைகளை வலிமைபடுத்த உதவுகிறது. உடலின் தோற்றத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் மேம்படுத்துகிறது.

சைக்கிள் ஓட்டுவதால் சுவாச முறை சீராகிறது. இதனால் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்ஸிஜன் பாய்வது மட்டுமின்றி நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Pedaling செய்வதால் மூட்டு வலிமை அதிகரிக்கிறது. மூட்டு வலி உள்ளவர்களுக்கான சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.

இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால் சிறந்த கார்டியோ பயிற்சியாக கருதப்படுகிறது.

சைக்கிள் ஓட்டும்போது கலோரிகள் அதிகம் குறையும்.

மன அழுத்தத்தை குறையும். மன அழுத்ததில் உள்ளவர்கள் தினமும் சைக்கிள் ஓட்டினால் புத்துணர்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

தினமும் சைக்கிள் ஒட்டுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தேவையான நோய் எதிர்ப்பு செல்களை உருவாக்க உதவியாக இருக்கும்.

மற்ற போக்குவரத்து முறைகளைவிட சைக்கிள் மசுபாட்டை உருவாக்குவதில்லை. உங்களை மட்டுமில்லாமல் உங்களின் சுற்றுபுறத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.