மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் மூன்று பானங்கள்!

Published by: பிரியதர்ஷினி

மாதவிடாய் முடிந்த பின் முதல் நாளில் ஆரம்பித்து பதிநான்காம் நாள் வரை, முன்னாள் இரவில் தண்ணீரில் வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்க வேண்டும். அந்த தண்ணீரை அடுத்த நாள் காலையில் குடிக்க வேண்டும்

இது ஹார்மோன்களை சமநிலையாக வைக்கும், மாதவிடாயின் போது ஏற்படும் வலியை குறைக்கும், மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்

அடுத்த இரண்டு நாட்களுக்கு சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரை அப்படியே காலையில் குடிக்க வேண்டும்

இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கருமுட்டையின் தரத்தை மேம்படுத்தும், கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும், ஆற்றலை கொடுத்து உடலை நீரேற்றமாக வைத்து இருக்கும்

15 வது நாள் முதல் 26வது நாள் வரை குங்குமப்பூ ஊற வைத்த தண்ணீரை குடிக்க வேண்டும்

இது மாதவிடாய் சார்ந்த கோளாறுகளை போக்கும், மனநிலையை மேம்படுத்தும், உடலை ரிலாக்ஸாக வைத்திருக்கும்

மாதவிடாய் சுழற்சிக்கு ஏற்றவாரு, இந்த மூன்று பானங்களை குடித்து வர நல்ல மாற்றத்தை உணர முடியும்