சத்துக்கள் நிறைந்துள்ள நெல்லிக்காய் எப்போதும் கிடைக்கும் வகையில் வீட்டில் ஸ்டோர் செய்வது எப்படி? தேன் நெல்லி..



நான்கு ஆப்பிளின் சத்து ஒரு நெல்லியில் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.



தேவையானவை - நெல்லிக்காய் - 1 கிலோ சுத்தமான் தேன் - 1 கிலோ (தேவைக்கேற்ப கூடுதலாகவும் பயன்படுத்தலாம்)
கண்ணாடி அல்லது மூடி உடன் கூடிய பீங்கான் ஜாடி



நெல்லிக்காயை சுத்தமாக கழுவி தண்ணியில்லாமல் வடிக்க வேண்டும். ஈரம் இல்லாமல் இருக்க வேண்டும்.



இதை இட்லி பானையில் வேக வைத்து எடுக்கவும்.



நெல்லிக்காயை நீள்வாக்கில் வெட்டி சூடு ஆறும் வரை விடவும்.



சுத்தமான தேனை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி நறுக்கிய நெல்லிக்காய் துண்டுகளை அதில் போடவும்.



நெல்லிகாய் தேனில் மூழ்கும் அளவில் இருக்க வேண்டும்.



பாட்டிலில் ஊற வைத்த நெல்லிக்காயை வெளியில் எடுத்து தட்டில் கொட்டி காய வைக்க வேண்டும். பின்னர் வெயிலில் உலர்த்த வேண்டும்.நன்



நன்கு காய்ந்தவுடன் காற்று புகாத டப்பாவில் ஸ்டோர் செய்யலாம். தினமும் ஒரு தேன் நெல்லி உடலுக்கு ஆரோக்கியம் தரும்.