கிரிக்கெட் உலகில் இவர் கடந்து வந்த உத்வேகப் பாதை குறித்து பார்ப்போம்.



ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த இடத்தில் தனது ஆட்டத்தால் அதை மடைமாற்றியவர்.



ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் மிதாலி ராஜ் பிறந்து வளர்ந்தார். தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மிதாலி ராஜின் தந்தை துரைராஜ், விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றியவர்.



மிதாலி, சிறுமியாக இருந்தபோது கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமில்லாதவர். மிதாலி கிரிக்கெட் பேட்டைப் பிடித்து விளையாடியபோது 10 வயது.



இந்திய கிரிக்கெட் அணியில் 16 வயதினில் என்ட்ரி கொடுத்தவர் மிதாலி.



அயர்லாந்து அணிக்கு எதிரான அந்த ஒருநாள் போட்டியில் சதம் விளாசி தனது என்ட்ரியை பதிவு செய்தார்.



மகளிர் கிரிக்கெட்டில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்துள்ள வீராங்கனை



தொடர்ச்சியாக 7 அரை சதங்களை ஒருநாள் கிரிக்கெட்டில் பதிவு செய்துள்ளார்



உலகக் கோப்பை கிரிக்கெட் அரங்கில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை.



இந்திய கிரிக்கெட் அணியை கடந்த 2005 முதல் 17 ஆண்டுகள் அணியை வழிநடத்தி வந்தவர் மிதாலி.



தனது ஆட்டத் திறனாலும், அணியின் வெற்றிக்கு அளித்த பங்களிப்பாலும் என்றென்றும் மிதாலி ராஜுக்கு இந்தியாவின் தங்கம்..
ஆல் தி பெஸ்ட் மிதாலி!