உலர் பழங்களில் பல சத்துகள் நிறைந்துள்ளது அவ்வாறு உலர் பழங்களால் செய்யப்படும் இந்த ஒரு ஹெல்த் ட்ரிங்க் போதும்..அத்தனை சத்துகளையும் அள்ளலாம்.. தேவையான பொருட்கள் : 5 பாதாம், 5 பிஸ்தா, 15 உலர் திராட்சை, 10 வால்நட், 3 பேரிட்சம்பழம், 2 அத்திப்பழம் மேலே குறிப்பிட்ட அத்தனை பொருட்களையும் ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும் காலையில் ஊற வைத்த நட்ஸோடு சேர்த்து தண்ணீரையும் மிக்ஸியில் ஊற்றி அரைக்கவும் சர்க்கரை எதுவும் சேர்க்க தேவையில்லை இது எந்த ஒரு வயதினருக்கும் ஏற்ற ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் ட்ரிங்காக இருக்கும் இந்த ஒரு ஹெல்த் ட்ரிங்கில் பல சத்துக்கள், ஆண்டிஆக்சிடெண்டுகளும் நிறைந்துள்ளது நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க தேவையான ஸ்டாமினாவை உங்களுக்கு அளிக்கும் மேலும் இது உங்கள் உடலின் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்து கொள்ள உதவலாம்