பூசணி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்.. இதில் மெக்னீசியம், துத்தநாகம், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன இது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவலாம் இதில் இருக்கும் துத்தநாகம், நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்தலாம் பூசணி விதையில் டிரிப்டோபான் உள்ளது இந்த டிரிப்டோபான் தூக்கத்தை தூண்டும் செரடோனினை சுரக்க செய்யும் இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும் இதில் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகிறது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் இதை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி சாப்பிட்டால் பிரச்சினைகள் ஏற்படும்