கோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்களை உங்கள் உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் சாப்பிட வேண்டும். சப்ஜா விதைகளில் புரதம், அத்தியாவசிய கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. பசியை அடக்கும் மருந்தாக இருப்பதால் அவை எடையை குறைக்க உதவலாம். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. சிறுநீரகத்திற்கு நல்லது. ஜூஸ், சர்பத் உள்ளிட்டவற்றில் சேர்த்து சாப்பிடலாம். சருமத்திற்கும் கூந்தலுக்கும் நல்லது. இதில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் அவரவர் உடல்நலனிற்கு ஏற்றவாறு சாப்பிடலாம். மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.