பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்!



பெரும்பாலான பிளாஸ்டிக் பாட்டில்களை சூடான சோப்பு நீரில் கழுவினால், சில முறை பயன்படுத்தலாம்



லெக்ஸான் (பிளாஸ்டிக் #7) பாட்டில்களில் காணப்படும் சில இரசாயனங்களால் செய்யப்படும் பாட்டில்களை தவிர்க்க வேண்டும்



பிளாஸ்டிக் பாட்டில்களைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் போது தேய்மானம் ஏற்படும்



காலப்போக்கில் உருவாகும் சிறிய விரிசல் மற்றும் பிளவுகளில் இருந்து இரசாயனங்கள் வெளியேறலாம்



மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய், கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம்



குழந்தைகள் வளரும் அமைப்புகளிலும் அழிவை ஏற்படுத்தலாம்



பிளாஸ்டிக் #2, LDPE, பிளாஸ்டிக் #4அல்லது பிளாஸ்டிக் #5 போன்ற பாட்டில்கள் மறு பயன்பாட்டிற்கு ஏற்றவையாக இருக்கலாம்



மற்ற பாட்டில்கள் வீட்டில் சேமித்து வைத்திருந்தால் மூட்டை கட்டி தூக்கி எறிந்திடுங்கள்



அவைகளை செடிகள் வளர்க்க, கலை பொருட்களை செய்ய பயன்படுத்தலாம்