சாலையோரங்களில் விற்கப்படும் மலிவான சன்கிளாஸ்களை அணியலாமா?



கோடை காலங்களில் பலரும் தங்கள் கண்களை சூரிய கதிர்களில் இருந்து பாதுகாக்க நினைப்பார்கள்



பைக் ஓட்டிகளோ எல்லா காலங்களிலும் தங்கள் கண்களை தூசுகளிலிருந்து காக்க நினைப்பார்கள்



இதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு வழி சன்க்ளாசஸ்



சிலர் நல்ல தரமான சன்க்ளாஸ்களை வாங்கினாலும் பலரும் சாலையோரங்களில் விற்கப்படும் மலிவான சன்க்ளாஸ்களையே வாங்குகின்றனர்



சாலையோரக் கடைகளில் பரவலாகக் கிடைக்கும் மலிவான கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று கண் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்



இந்த சன்கிளாஸ்கள் 100% UV பாதுகாப்பை வழங்காது



கண்ணாடிகளே அணியாததை விட, உண்மையில் மலிவான க்ளாஸ்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் கூறுகிறார்கள்



மலிவான சன்கிளாஸ்களை அணிவதால் தலைவலி, தலைசுற்றல், கண்களுக்கு நீண்ட நாள் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம்



சில மலிவான சன்கிளாஸ்கள் உண்மையில் கண்களை அடையும் புற ஊதா கதிர்வீச்சின் அளவை அதிகரிக்கலாம்