சிலர் உணவு இல்லாமல் கூட இருப்பார்கள், போன் இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்



எவ்வளவு நேரம் ஒருவர் அலைபேசி உபயோகிக்கிறார் என்பதைப் பொறுத்து ரேடியேஷனின் வீரியம் இருக்கும்



செல்போன் மாடலைப் பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும்



அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தாத மொபைல் மாடலை உபயோகப்படுத்துவது சிறந்தது



அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது முக்கியம்



மொபைலில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது



அதிகமாக மொபைல் உபயோகிப்பதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது



ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கலாம்



காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்



போனால் ஏற்படும் கம்ப்யூட்டர் விஷன் சிண்ரோம், தலை மற்றும் கண் வலியை உண்டாக்கும்