தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் சகோதரி ரய்ஹானாவின் மகன் 2006ம் ஆண்டு வெளியான 'வெயில்' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் நடிகராக 'டார்லிங்' படத்தில் அறிமுகமானார் 'ஜி.வி. பிரகாஷ் குமார் புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளராகவும் உள்ளார் இசையமைப்பாளர், நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட திறமையாளர் 'சூரரைப் போற்று' படத்திற்காக தேசிய விருது பெற்றார் ஏராளமான ஹிட் பாடல்களுக்கு இசையமைத்தும், பாடியும் உள்ளார் 2013ம் ஆண்டு தனது பள்ளி தோழியான பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார் தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது