முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்



வெந்தயம், சோம்பு, மல்லி, வரமிளகாய், சோம்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும்



இவற்றை ஆறவைத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்



குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக்க வேண்டும்



பின் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்



தக்காளியை சேர்த்து குழைய வதக்கி, சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்



கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து 1/4 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்



கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டு ,புளிச்ச கீரையை சேர்த்து, உப்பு, அரைத்த பொடியை சேர்த்து வதக்குக



கீரை வெந்ததும், அதை குக்கரில் உள்ள சிக்கனுடன் சேர்த்து, குக்கரை மூடி 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்



அவ்வளவுதான் சுவையான கோங்குரா சிக்கன் தயார்