இந்தியாவின் பாரம்பரிய 5 மர்மக் குகைகள்..

இந்த மர்மமான குகைகளைக் காண்பதும் அவற்றை ஆராய்வதும் சிறந்த அனுபவமாக இருக்கும்.

இந்த குகைகளில் பலங்கால ஓவியங்கள்,சிற்பங்கள்,கல்வெட்டுகளை பாதுகாத்து வருகின்றனர்.

1. பொரா குகை

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அனந்தகிரி மலையில் அமைந்துள்ளது.

2. பிம்பேட்கா குகை

பழங்கால பாறை ஓவியங்களுக்காக புகழ் பெற்ற தொல்பொருள் தலமாகும்.1957ல் இந்தக் குகை கண்டுபிடிக்கப்பட்டது.

3. அமர்நாத் குகை

ஜம்மு காஷ்மீரின் பிரம்மிக்க வைக்கும் இமயமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்துக்களின் வழிபாட்டுத் தலமாகும்.

4. உண்டவல்லி குகை

கட்டடக்கலை மற்றும் விரிவான செதுக்கல்களுக்கு பெயர் பெற்ற இந்தக் குகைகள் குப்தர் காலத்தின் பெருமையை பிரதிபலிக்கின்றன.

5. எலிஃபெண்டா குகை

மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி தீவில் இந்தக் குகை உள்ளது.