அரை கிலோ இஞ்சியை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்



இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்



ஒரு கைப்பிடி அளவு முந்திரி, பாதம், பிஸ்தா ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்



இவற்றையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்



ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் கால் கப் நெய் சேர்க்க வேண்டும்



நெய்யில் இஞ்சி விழுதை சேர்த்து 15 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்



இதனுடன் ஒரு கப் வெல்லம் சேர்த்து உருகும் வரை கிளறி விட வேண்டும்



பின் பொடித்த நட்ஸ்கள், திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும்



அல்வா பதம் வரும் வரை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்



அவ்வளவுதான் சுவையான இஞ்சி அல்வா தயார்