1 கப் கருப்பு கவுனி அரிசியை 3 மணி நேரம் ஊற வைக்கவும் ( இது வேக நேரம் எடுக்கும்) கால் கப் பாசி பருப்பை வறுத்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் பாலுடன் 5 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும் பின் அரிசியை சேர்த்து நன்றாக வேக விட வேண்டும். குக்கராக இருந்தால் 10 விசில் விடவும் அரிசி 60 சதவீதம் வெந்ததும் பாசி பருப்பை இதனுடன் சேர்க்க வேண்டும் இரண்டும் வெந்ததும் அதில் ஒன்றரை கப் துருவிய வெல்லத்தை சேர்த்து வேக விடவும் வெல்லம் அரிசியுடன் நன்றாக சேர்ந்து குழைந்து வரும் வரை கிளறி விட வேண்டும் நெய்யில் முந்திரி, திராட்சை, தேங்காய் துண்டுகளை வறுத்து பொங்கலில் சேர்க்கவும் அடுப்பை அணைத்து, 50 மிலி நெய் சேர்த்து, ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து கிளறவும் சுவையான கருப்பு கவுனி பொங்கல் தயார். இதை கிளறி சூடாக பரிமாறலாம்