காதலி மஞ்சிமாவை கரம் பிடித்த நடிகர் கெளதம் கார்த்திக்!

கெளதம் கார்த்திக் தென்னிந்திய திரை நடிகரும், பிரபல நடிகர் கார்த்திக்கின் மகனும் ஆவார்

நடிகை மஞ்சிமா மோகன் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்

சில வாரங்களுக்கு முன், கெளதம் மஞ்சிமா ஜோடி தாங்கள் காதலித்து வருவதாக கூறினர்

இது தொடர்பாக இருவரும் பதிவிட்ட சமூகவலைத்தளப்பதிவும் இணையத்தில் வைரலானது

இருவரும் 2019-ல் முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்திருந்தனர்

அதில் இருந்தே இந்த ஜோடி காதலித்து வருவதாக தகவல் வெளியானது

இந்த தகவலை கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இருவரும் உறுதி செய்தனர்

கெளதம் மஞ்சிமா இன்று திருமணம் செய்து கொண்டனர்

கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது

இந்த தம்பதியினருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்