ஓடிடியில் வெளியாகும் லவ் டுடே.. தேதியை அறிவித்த படக்குழு!

நவம்பர் 4 ஆம் தேதி தியேட்டரில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லவ் டுடே'

வெளியான அன்றைய தினம் முதல் தற்போது வரை பாக்ஸ் ஆபீஸில் கலக்கிவருகிறது

அண்மையில் 50 கோடி வசூலை தாண்டியதாக தகவல் வெளியானது

தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தப்படம் அங்கும் வசூலில் சாதனை படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது

இதனிடையே, இந்தப்படம் எப்போது ஓடிடியில் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது

அந்த எதிர்பார்ப்பிற்கு பதிலளிக்கும் வகையில் ஓடிடியில் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளது படக்குழு

இது டிசம்பர் 2 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது

இந்த தகவல் ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது

பிரதிப் இயக்கிய இரண்டாவது திரைப்படம் லவ் டுடே