1987 ஜூன் 24 அன்று அர்ஜென்டினாவின் ரோசாரியோவில் மெஸ்ஸி பிறந்தார்.

ரோசாரியோவிலேயே உலகப் புரட்சியாளர் சே குவேரா பிறந்தார்.

மெஸ்ஸிக்கு தந்தையே முதல் கால்பந்து பயிற்சியாளர்.

நான்கு வயதிலேயே மெஸ்ஸி காண்ட்ரோலி கிளப்பில் விளையாடினார்.

ஏழு வயதில் நியூ வெல்ஸ் ஓல்ட் பாய்ஸில் சேர்ந்து பார்சிலோனாவுக்குப் போவதற்கு முன் 500 கோல்கள் அடித்தார்

சிறு வயதிலேயே கோல் மெஷினாகப் பெயர் பெற்றார்.

பத்து வயதில் வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு கண்டறியப்பட்டது.

மெஸ்ஸி உயரம் வளராது என்று பலர் நினைத்தார்கள்.

அவரது திறமையைப் பார்த்த பார்சிலோனா கிளப் அவரது சிகிச்சைக்கான செலவை ஏற்றுக்கொண்டது.

அந்த சிகிச்சையின் காரணமாகவே ஐந்தரை அடி உயரம் வரை வளர முடிந்தது.

ஒவ்வொரு கோல் அடித்த பிறகும் மெஸ்ஸி வானத்தை நோக்கி விரல் காட்டுவது வழக்கமாகிவிட்டது.

அவரது விளையாட்டுக்கு உதவிய பெற்றோரை நினைவுகூறும் ஒரு அடையாளம் அது.

அர்ஜென்டினாவுக்கு முதல் போட்டியில் மாற்று வீரராக வந்து ஒரு நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற்றார்.

அதன் பிறகு அவர் உலகக் கோப்பையில் இளைய கோல் அடித்தவர் ஆனார்.

மெஸ்ஸி சிறுவயது முதல் ரொனால்டோவை மிகவும் விரும்புகிறார்.

ரோனால்டோ இன்ஃப்ளூயன்ஸ் மெஸ்ஸி டிரிப்ளிங்கில் தெரிகிறது.

2012ஆம் ஆண்டு காலண்டர் ஆண்டில் 91 கோல்களை அடித்து சாதனை படைத்தார்.

மொத்தம் மெஸ்ஸி 890க்கும் மேல் கோல்கள், நானூற்றுக்கும் மேல் அசிஸ்ட்கள் செய்து ஒரு புதிய அளவுகோலை ஏற்படுத்தியுள்ளார்.

Published by: ஜேம்ஸ்