30 வயசாகி விட்டதா? அப்போ இந்த உணவுகளை நிச்சயம் உண்ணுங்கள்! 30 வயதிற்கு பிறகு எலும்புகளில் ஆரோக்கியத்தை பாதுகாக்க சில உணவுகளை பெண்கள் உண்ண வேண்டியது அவசியம் புரதம் உங்கள் உடலில் குறையும் போது எலும்புகளில் தேய்மானம் ஏற்படுகிறது அதனால் உங்கள் உணவில் போதுமான அளவு புரதம் இருக்க வேண்டியது அவசியம் புரதத்தில் இருக்கும் அமினோ அமிலங்கள் செல்களில் மீள் உருவாக்கத்திற்கு உதவுகிறது இது உங்களுக்கு ஏற்படும் செரிமான பிரச்சினைகளை போக்க உதவும் இதற்கு புரதம் நிறைந்த இறைச்சிகளை எடுத்து கொள்ளலாம் புரதத்தை தாண்டி மீனில் உள்ள அமினோ அமிலங்கள் பல நன்மைகளை தர வல்லது பால் பொருட்களை உண்ணுவதால் உங்கள் புரதம் தேவை பூர்த்தி அடையலாம் அளவுக்கு அதிகமான புரதம் எடுத்தால் உடல் எடை அதிகரிக்கும் ஆபத்தும் இருக்கிறது