உங்களின் உணவு பழக்கவழக்கங்களை பொருத்துதான் உங்கள் ஆரோக்கியமும் இருக்கும்



அதனால் உங்கள் உணவின் மீது நீங்கள் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்



உங்கள் உடலுக்கு தேவையான சத்துகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக உங்கள் உணவு பழக்கம் இருக்க வேண்டும்



அப்படி இருக்க உங்கள் தினசரி உணவில் இதெல்லாம் கண்டிப்பா சேர்த்துக்கோங்க..!



மோர் உங்கள் உடலில் உள்ள சூட்டை தணிக்க உதவும்



இளநீரும் சூட்டை தணிக்க உதவும்; தினமும் இளநீர் அல்லது மோர் ஏதாவது ஒன்று பருகுவது நல்லது



தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது உங்கள் உடலின் ப்ரோட்டீன் தேவையை பூர்த்தி செய்ய உதவும்



தினமும் ஸ்நாக்ஸாக உலர்ந்த நட்ஸ் அல்லது உலர் திராட்சை எடுத்து கொள்வது நல்லது



சிறிய துண்டுகளாக வெட்டிய கேரட் அல்லது வெள்ளரிகாயை சிற்றுண்டியாக சாப்பிடலாம்



தினமும் காலையில் ட்ரை ஃப்ரூட்ஸ் ஜூஸ் குடிப்பது உங்கள் உடலுக்கு வலிமையை தரும்