அதிரசம் என்றும் அழைக்கப்படும் இந்த இனிப்பு வகை தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பாரம்பரிய இனிப்பு ஆகும், இது வெல்லம் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
பால் போளி என்பது குங்குமப்பூ கலந்த பாலில் ஊறவைக்கப்பட்ட ஆழமாக வறுத்த பூரி ஆகும். இந்த மென்மையான மற்றும் இனிப்பான உணவுகள் தனித்துவமான சுவைக்காக பாதம் மற்றும் முந்திரிக்களால் அலங்கரிக்கப்படுகின்றன.
பால் பாயசம் என்பது பால், சர்க்கரை மற்றும் அரிசியுடன் தயாரிக்கப்படும் திரவ உணவாகும். பால் பாயசம் செய்வதற்கு பக்குவம் மட்டும் பதம் மிக அவசியமானதாகும். பண்டிகை காலங்களில் பால் பாயசம் நிச்சயம் இடம் பெற்றுப்விடும்
ஒப்பட்டு ஒரு இனிப்பான தட்டையான ரொட்டி. இது பருப்பு மற்றும் வெல்லத்தால் செய்யப்படுகிறது. நாட்டின் பிற பகுதிகளில் இது பூரன் போளி என்று அழைக்கப்படுகிறது. ஏலக்காய் சுவையுடன் கூடிய இந்த உணவு பொதுவாக உகாதி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது தயார் செய்யப்படுகிறது
கொழுக்கட்டை இனிப்பான மற்றும் ஆவியில் வேகவைத்த தென்னிந்திய உணவாகும். தேங்காய் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட பூரணம் இதுக்கு சுவையை கொடுக்கும். இது விநாயகருக்கு விருப்பமான பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
மைசூர் பாக் கடலை மாவு நெய் மற்றும் சர்க்கரை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு ஆகும். மைசூரைச் சேர்ந்த இந்த உணவானது மகிழ்ச்சி பண்டிகை காலங்களில் சாப்பிடப்படும் உணவாகும்
ரவா கேசரி என்பது ரவை அடிப்படையிலான இனிப்பு ஆகும், வாயில் போட்டவுடன் கரையும் தன்மையையும் கொண்டுள்ளது
உண்ணியப்பம் சிறிய மற்றும் வட்ட வடிவத்தில் இருக்கும் அப்பம் வகையாகும். இது அரிசி, வெல்லம், வாழைப்பழம் மற்றும் தேங்காய் கலந்து செய்யப்படுகிறது