செய்முறை: குக்கரில் துவரம் பருப்பு, பூண்டு, தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும். கடுகு பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
அடுத்தது கறிவேப்பிலை, முள்ளங்கி சேர்த்து வதக்கிவிட்டு உப்பு, மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து கிளறிவிடவும். அதன் பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவைக்கவும்
அடுத்தது புளி கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி வேகவைத்த பருப்பை சேர்த்து மிதமான தீயில் மீண்டும் 10 நிமிடம் வேகவிடவும்
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, தேங்காய் சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான முள்ளங்கி சாம்பார் தயார்