கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 11 கத்திரிக்காய் பொரியல், கூட்டு செய்யும் போது, அதில் கொஞ்சம் கடலை மாவு தூவி இறக்கினால் சுவை கூடுதலாக இருக்கும் பூண்டுடன் சிறிது கேழ்வரகு சேர்த்து வைத்தால் பூண்டு நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும் குருமா வகைகளை செய்யும் போது, வெங்காயத்தை பச்சையாக அரைத்து ஊற்றினால் குருமா மணமாகவும் சுவையாகவும் இருக்கும் இட்லி மாவு அரைத்தவுடன் ஒரு வெற்றிலை காம்பு கிள்ளி மாவின் மேல் போட்டால் பாத்திரத்திற்கு மேலாக மாவு பொங்கி வழியாது இடியாப்ப மாவு பிசையும் போது, முக்கால் பங்கு தண்ணீர், கால் பங்கு ஊற்றி பிசைந்து அவித்தால், இடியாப்பம் வெள்ளை பஞ்சு போல் வரும் அஞ்சறை பெட்டியில் 1 வசம்பு துண்டு போட்டு வைத்தால் உளுந்து, மஞ்சள் தூள், வடகம் எதிலும் வண்டு வராமல் இருக்கும் சூப் செய்யும் போது சிறிதளவு அவல் வறுத்து பொடியாக்கி சேர்த்தால் சூப் சுவையாக இருக்கும் பாகற்காய் குழம்பு செய்யும் போது இரண்டு துண்டு மாங்காய் சேர்த்தால் கசப்பு தன்மை தெரியாது, ருசியும் அருமையாக இருக்கும்