சீஸ் பிரஞ்சு டோஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் : முட்டை - 2, பால் - 1/2 கப் காய்ச்சி ஆற வைத்தது, உப்பு -1/4 தேக்கரண்டி,மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி, வெண்ணெய், பிரட் துண்டுகள், சீஸ் துண்டுகள்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு கலக்கவும். முட்டை கலவையை ஒரு தட்டில் ஊற்றி வைக்கவும்
ஒரு பானை சூடாக்கி வெண்ணெய் தடவி வெண்ணெய் உருகியதும், ஒரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சூடான பானில் வைக்கவும்
ஒரு நிமிடத்திற்கு பிறகு பிரட்டை திருப்பி விட்டு அதன் மீது ஒரு சீஸ் ஸ்லைஸை வைத்து, அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்கவும்
ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி, பிரட்டின் ஓரங்களில் வெண்ணெய் தடவவும். வெந்த பிரட்டின் மீது சீஸ் ஸ்லைஸை வைத்து அதன் மேல், மற்றொரு பிரட் துண்டை எடுத்து முட்டை கலவையில் இருபுறமும் நனைத்து சீஸ் மீது வைக்கவும்
ஓரங்களில் வெண்ணெய் தடவி, சான்விச்சை மறுபுறம் திருப்பவும். பானை மூடி வைத்து குறைந்த தீயில் 3 நிமிடம் வேகவிடவும்
சான்விச்சை மறுபுறம் திருப்பி மூடி வைத்து 2 நிமிடம் வேகவிடவும். சீஸ் பிரஞ்சு டோஸ்ட் தயார்