கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 10

Published by: பிரியதர்ஷினி

தக்காளி, வெங்காய சட்னி செய்யும் போது சிறிது கருப்பு எள்ளை வறுத்து பொடி செய்து சேர்த்தால் சட்னி சுவை வித்தியாசமாக இருக்கும்

கடலை எண்ணெயில் சிறிதளவு புளியை போட்டு வைத்தால் எண்ணெய் கெட்டுப்போகாமல் இருக்கும்

உளுத்தம்பருப்பை சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்து தேவைக்கேற்ப தேங்காய், மிளகு சேர்த்து சட்னி செய்தால் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்

கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட தேங்காய் மூடியில் விபூதி வாசம் போக, அதை நன்கு கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும்

பொட்டுக்கடலையுடன் வரமிளகாய், பூண்டு, கொப்பரை தேங்காய், சிறிதளவு பெருங்காயத்தூள், கல் உப்பு சேர்த்து பருப்பு பொடி செய்தால் அருமையாக இருக்கும்

சூப்போடு முட்டை சேர்ப்பதாக இருந்தால், அடுப்பின் தீயை குறைத்து முட்டையை வேறொரு பாத்திரத்தில் ஊற்றி அடித்துக்கொள்ள வேண்டும். கொதிக்கும் சூப்பில் பொறுமையாக இந்த முட்டை கலவையை சேர்த்தால், சூப் பார்க்க வித்தியாசமாக இருக்கும்

சேனைக்கிழங்கு நறுக்கும் போது கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டால், கையில் அரிப்பு ஏற்படாது

கீரை கூட்டு செய்யும் போது பூண்டு மற்றும் சோம்பை லேசாக இடித்து சேர்த்துக்கொண்டால் கீரை கூட்டு வாசமாக இருக்கும்