கிச்சன் வேலையை சுலபமாக்கும் டிப்ஸ் - பாகம் : 12

Published by: பிரியதர்ஷினி

தயிர் மோர் பாத்திரங்களை சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கிவிடும்

தயிர் பச்சடி நீர்த்துப் போய் விட்டால் சிறிது நிலக்கடலையை வறுத்து நைசாக பொடி செய்து கலந்து சேர்த்தால் பச்சடி கெட்டியாவதோடு சுவையும் சத்தும் கூடும்

மீன் வறுவல் செய்யும் போது சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து செய்தால் ருசியாகவும் இருக்கும் மீனும் கருக்காது

கீரை வடை செய்யும் போது அரசி மாவு மற்றும் கான்பிளவர் மாவு ஆகியவற்றை இரண்டு டீஸ்பூன் சேர்த்து வடை செய்தால் சுவையாக இருக்கும்

உளுந்த வடை மாவு அரைக்கும் போது உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறு மொறுவென இருக்கும்

அசைவ குழம்போ, கிரேவியோ செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தினால் சுவை அட்டகாசமாக இருக்கும்

ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகரை சேர்த்தால் சீக்கிரம் கேட்டு போகாமல் இருக்கும்

கோதுமை தோசை செய்யும் போது வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி அனைத்தையும் வதக்கி கோதுமை மாவுடன் சேர்த்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்