துவரம் பருப்பு, உடைத்த பொட்டுக் கடலை தலா 100 கிராம் எடுத்துக் கொள்க பாசிப்பருப்பு, பூண்டு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்துக் கொள்க 2 மேசைக் கரண்டி சீரகம் , 15-20 குண்டு மிளகாய் எடுத்துக் கொள்க 30 கிராம் பெருங்காயம், ஒரு கை பிடி கறிவேப்பிலை எடுத்துக் கொள்க மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் தனித்தனியே வறுத்துக்கொள்க இவற்றுடன் தேவையான அளவு உப்பு , சிறிய துண்டு வெல்லம் சேர்க்கவும் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும் இதை சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கும் சூப்பர் காம்போ