1 கிண்ணத்தில் ஒரு கப் கடலை மாவு, 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கவும் இதனுடன் மிளகாய்த்தூள் 1 1/2 டீஸ்பூன், மஞ்சள்தூள் 1 சிட்டிகை சேர்க்கவும் தேவையான அளவு உப்பு ,தண்ணீர் சேர்த்து கெட்டி பேஸ்ட் பதத்தில் கலக்கவும் அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் சேர்த்து சூடாக விடவும் இப்போது மாவை கரண்டியில் ஊற்றினால் அது எண்ணெயில் விழும் ஒரு ஸ்பூன் உதவியுடன் மாவை எண்ணெயில் விழ வைக்கலாம் இதை மொறு மொறுவென பொறித்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும் கறிவேப்பிலை , பூண்டு, முந்திரியை எண்ணெயில் வறுத்து இதில் சேர்க்கவும் இதில் சிறிது மிளகாய் பொடி சேர்த்து அனைத்தையும் கலந்தால் காராபூந்தி ரெடி