இரண்டு நேந்திர வாழையை நறுக்கி 2 ஸ்பூன் நெய்யில் வதக்கவும் வாழை சற்று நிறம் மாறியதும் கரண்டியால் மசித்து விடவும் இதனுடன் கால் கப் ரவை சேர்த்து நன்றாக வறுக்கவும் இதனுடம் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுக்கவும் தேங்காய் சரியாக வறுபடாவிட்டால் உருண்டை கெட்டு விடும் இப்போது இரண்டு கப் பால் சேர்த்து 2 நிமிடம் நன்றாக கலந்து விடவும் 3 ஸ்பூன் சர்க்கரை, சிறிது ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும் இதை உருண்டைகளாக உருட்டி 3 ஸ்பூன் நெய்யில் வறுத்தெடுக்கவும் அவ்வளவு தான் சுவையான வாழைப்பழ ரவை உருண்டை தயார்