ஊற வைத்த ஒரு கப் இட்லி அரிசியை கொர கொரப்பாக அரைக்கவும் இதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும் இதனுடன் 1 கப் சாதத்தை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும் இதனுடன் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 12 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும் பின் மாவில் 1 ஸ்பூன் சர்க்கரை சிறிது ஆப்ப சோடா சேர்த்து கலக்கவும் இதை சற்று தடிமனான தோசையாக ஊற்றி மூடிப்போட்டு 1 பக்கம் வேக வைக்கவும் அவ்வளவு தான் சுவையான மெது மெது தேங்காய் தோசை தயார்