அல்வா என்றாலே திருநெல்வேலி தான் நினைவுக்கு வரும். இங்கு கிடைக்கும் இருட்டு கடை அல்வாவிற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
வறுத்த காபி கொட்டைகளின் இயற்கை நறுமனத்துடன் இருக்கும் இந்த காபியை ஒருமுறை குடித்தால், பின் காபி குடிப்பதற்காகவே நீங்கள் கும்பகோணம் சென்றாலும் ஆச்சரியமில்லை!
நவாப் ஆட்சியிலிருந்தே ஆம்பூர் பிரியாணி புகழ் பெற்றதாக இருக்கிறது.
இது நம் வீட்டில் சுடும் இட்லியின் வடிவத்தில் இருக்காது. இட்லி மாவுடன் சீரகம், இஞ்சி, மிளகு சேர்த்து இவர்கள் சுடும் இட்லியின் சுவை மக்களை கவர்கிறது.
கடலோர மாவட்டமான கன்னியாகுமாரியில் உள்ள நாஞ்சில்நாடு மீன் குழம்பிற்கு பெயர்போனது. தேங்காய் எண்ணெய் மிதக்க மசாலா பொருட்கள் சற்று தூக்கலாக சேர்த்து தரும் மீன் குழம்பை நினைத்தாலே நாவில் எச்சில் ஊறும்.
தமிழ்நாட்டில் எங்கு சென்று ஜிகர்தண்டா குடித்தாலும் மதுரைக்கு இணையாகாது. அதுமட்டுமல்ல, மட்டனில் செய்யும் கோனார் கடை கரி தோசை மதுரையை தவிர வேறு எங்கு தேடிப்பார்த்தாலும் கிடைக்காது.
செட்டிநாடு சமையல் என்று சென்னாலே நாவில் காரம் தென்படும். அப்படி காரம் தூக்கலாக சமைக்கும் செட்டிநாடு சிக்கனுடன் பனியாரம் சேர்த்து சாப்பிடுங்கள், வாழ்வில் மறக்கமாட்டீற்கள்.
இங்கு கிடைக்கும் பரோட்டவின் மேல்பகுதி சேலையின் பார்டர் போலவே இருக்கும். இந்த பரோட்ட பார்ப்பதற்கு மட்டுமல்ல சுவைப்பதற்கும் அழகாக இருக்கும்.
மைதா மற்றும் மாவாவில் பழங்கள் மற்றும் வால்நட் முந்திரி போன்ற பருப்புகள் சேர்த்த மக்கன் பேடாவை, சர்க்கரை பாகில் நனைத்து எடுத்து சாப்பிட்டால், அது ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.
வீட்டில் தயாரிக்கும் மசாலாக்களும், பெரியகுளத்தில் வாங்கும் பூண்டுகளும், மதுரையில் வாங்கும் பருப்புகளும் தான் இந்த காரா சேவிற்கு தனி சுவை சேர்க்கிறது.