மொறு மொறு ஆனியன் ரிங்ஸ் வித் தேங்காய் சட்னி செய்ய ரெசிபி இங்கே

Published by: ABP NADU

2 பெரிய வெங்காயம்
100 கிராம் அரிசி மாவு
10 கிராம் ஓமம்
200 கடலை மாவு
1/2 ஸ்பூன் உப்பு
1/2 மிளகாய் தூள்
தேவையான அளவு தண்ணீர்

1 துருவிய தேங்காய், 3 காய்ந்த மிளகாய்,தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ஓமம், கடலை, மாவு உப்பு,மிளகாய் தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மாவு போல் கலக்கவும்

வெங்காயத்தை வட்டமாக அரிந்து, வெங்காயத்தை மாவில் நன்றாக பிரட்டவும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கொதிக்கவிடவும்

கொதிக்க வைத்த எண்ணெயில் மாவில் பிராட்டிய வெங்காயத்தை போடவும்.

தங்க நிறத்திற்கு வந்த பின் ஆனியன் ரிங்ஸ்சை எடுக்கவும்

மிக்சியில் துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய்,தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பதமாக அரைக்கவும்

அரைத்து வைத்த தேங்காய் சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்

அரைத்து வைத்த தேங்காய் சட்னியும் ஆனியன் ரிங்ஸ் வைத்து அனைவருக்கும் பரிமாறவும்