மிளகாய்த் தூளுடன் செங்கல் தூள், சுண்ணாம்பு தூள், உப்பு, செயற்கை சாயங்கள், உமி, மரத்தூள் போன்றவற்றை கொண்டு கலப்படம் செய்வர்.
அதை வீட்டிலேயே சில ஆய்வுகள் செய்து கண்டுபிடிக்கலாம்.
1. மிளகாய்த் தூள் ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்தால் சாயங்கள் வெளிவராமல் முழுதாக கரையாமல் இருக்க வேண்டும். அப்படி சாயங்கள் வெளிவந்தால் கலப்படம் செய்திருக்க கூடும்.
2. சிறிது மிளகாய்த் தூளை எடுத்து கைகளில் தேய்த்து பாருங்கள். கலப்படம் செய்திருந்தால் கைகளில் அதிகளவு சாயம் ஒட்டிக்கொள்ளும். தூய்மையான மிளகாய்த் தூள் லேசான கரைகளையே ஏற்படுத்தும்.
3. மிளாகாய்த் தூளை தண்ணீரில் கலந்தால் மெதுவாகத்தான் அடியில் மூழ்கும். விரைவாக அடிப்பகுதிக்கு சென்றாலும், நீரின் மேல் மிதந்தாலும் செங்கல் தூள் கலந்திருக்க கூடும்.
4. தண்ணீரில் மிளாகாய்த் தூள் கலந்த பின் அடியில் இருக்கும் மிளகாய்த் தூளை கையில் தேய்த்து பாருங்கள். கை சொரசொரப்பாக இருந்தால் செங்கல் தூள் அல்லது வழுவழுப்பாக இருந்தால் சோப்புக்கல் கலந்த்திருக்கக்கூடும்.
5. மிளகாய்த் தூளை மென்மையான மேற்பரப்பு கொண்ட இடத்தில் தேய்த்துப் பாருங்கள். அப்போது மிளகாய்த் தூள் கரடுமுரடான அமைப்பில் இருந்தால் செங்கல் தூள் அல்லது மண் கலந்திருக்க கூடும்.
இப்படி கலப்படம் செய்துள்ள மிளகாத் தூள்களை சமையலுக்கு உபயோகிப்பதால், நோய்கள் வரும் அபாயம் அதிகம் உள்ளது.