குருமா திக்காக இருக்க.... துருவிய தேங்காயுடன், முந்திரி சேர்த்து அரைத்து குருமாவில் சேர்க்கவும் இட்லி பஞ்சு போல் சாஃப்ட்டாக இருக்க... இட்லி மாவில் இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இட்லி சுட வேண்டும் பனீர் கிரேவி சுவையாக இருக்க.... சூடான உப்பு தண்ணீரில் பனீரை ஊற வைத்து, பின் கிரேவி செய்தால் சுவையாக இருக்கும் சப்பாத்தி சுவையாக இருக்க... கோதுமை மாவை அரைக்கும் போது சோயா பீன்ஸை சேர்த்து அரைக்கவும் பாயாசம் சுவையாக இருக்க.... பாயசத்தில் முந்திரிக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை சிறு துண்டாக நறுக்கி நெய்யில் வறுத்து சேர்க்கவும்