ரோஜா குல்கந்து சாப்பிடுங்க.. வயிற்றில் ஐஸ் வைத்தது போல் இருக்கும்! ரோஜா குல்கந்து என்பது ரோஜா மலரிலிருந்து தயாரிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த உணவு இதை செய்ய, பூச்சிகொல்லி அடிக்காத இயற்கையான ரோஜா பூக்கள் தேவைப்படும் வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை எடுத்துக்கொள்ளலாம் பெரியவர்களுக்கு 2 டீஸ்பூன் அளவும், சிறியவர்களுக்கு 1 டீஸ்பூன் அளவும் கொடுக்க வேண்டும் தினமும் வெறும் வயிற்றில் இதை எடுத்துக்கொள்ளலாம் வளரும் பிள்ளைகளுக்கு பாலில் கலந்து மில்க் ஷேக் போன்று கொடுக்கலாம் வெந்நீரில் குல்கந்தை கலந்து குடித்து வந்தால் மலம் இளகி மலச்சிக்கல் குறையலாம் வயிற்றில் இருக்கும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை சமநிலையாக்கலாம் பித்தம் பிரட்டலை போக்க ரோஜா குல்கந்து உதவும் ஆண்களின் உடலுக்கு வலிமை கிடைக்க இவை உதவுகிறது